டொனால்ட் டிரம்ப் அறிக்கையை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் மனு

case against on trump in america

அமெரிக்க அதிபரான டிரம்ப் முன்பே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதுஎன்னவென்றால் அமெரிக்காவிற்கு சிறுவயதிலே சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகை ரத்து என குறிப்பிட்டுள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டத்தால் அமெரிக்காவின் கல்வி வேலைவாய்ப்பு பாதிப்பு அடைகிறது இதனால் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சலுகையை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.

டிரம்பின் இந்த அதிரடி முடிவால் 8லட்சத்திற்கு மேலான இளைஞர்கள் பாதிக்க படுகின்றனர். இது குறித்து இவர் தேர்தல் பிரச்சாரத்திலேயே கூறியுள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தால் இன்று வளர்ந்து பெரியவர்கள் ஆனபின்னும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சலுகைகள் வழங்கப்படுகின்றன அதை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடுகிறார். டொனால்ட் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பால் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதனை கண்டித்து வாஷிங்டனில் வெள்ளை மளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி இதனை தொடர்ந்து அமெரிக்கா அரசின் மீது கலிபோர்னியாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்கா அரசு வழங்கிய சலுகைகளை ரத்து செய்தால் தங்களது கல்வி வாழ்கை பாதிக்கும் என குடியேறியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tagged with:     ,