அண்மை செய்திகள்

  • chennai raining
    சென்னையில் மேலும் கொட்டி தீர்க்கும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
    Posted in: அண்மை செய்திகள்

    சென்னையில் பல இடங்களில் இன்றும் கனமழை கொட்டி தீர்க்கின்றது. நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கின்றது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக தரமணியில் 19செ.மீ மழை பதிவாகியுள்ளது. இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை தரமணியில் 19செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 18செ.மீ, அண்ணா பல்கலையில் 15செ.மீ, மீனம்பாக்கத்தில் 14செ.மீ, புழலில் 9செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு அடைந்துள்ளது. சில […]

  • safest city in india
    பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களின் பட்டியல் வெளியீடு – தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?
    Posted in: அண்மை செய்திகள்

    இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வசிக்க ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளன. அதில் தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்துள்ளது. பிளான் இந்தியா என்ற அமைப்பு பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு, உடல்நலம், கல்வியறிவு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையை கொண்டு ஒரு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளன. அதில் கோவா முதல் இடத்தை பிடித்துள்ளது. கேரளா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய இடங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்துள்ளது. கடைசி மூன்று இடங்களில் டெல்லி, […]

  • IPS officer Safeer Karim caught for cheating
    ஐ பி எஸ் தேர்வில் கணவனுக்கு காப்பி அடிக்க உதவிய மனைவி கைது
    Posted in: அண்மை செய்திகள்

    நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எஸ் தேர்வில் அதிகாரி ‘சபீர்கரீம்’ என்பவர் தேர்வு நடைபெற்ற பொழுது காப்பி அடித்து மாட்டிக்கொண்டார். அவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வசூல்ராஜா படத்தில் பயன்படுத்தியவாரு ப்ளூடூத் இயற் போன் மூலம் வினாக்களுக்கு விடை பெற்று தேர்வில் எழுதிவந்துள்ளார். இதனை கண்காணிப்பு அதிகாரிகள் கவணித்து அவரது ப்ளூடூத் இயற் போனை கைப்பற்றினர். அவர் வினாக்களை சொல்ல சொல்ல அவரது மனைவி ஐதராபாத்திலிருந்து அதற்க்கான பதிலை கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக […]

  • chennai raining
    தத்தளிக்கும் சென்னை மிரட்டிவரும் கனமழை – மீட்ப்பு படை தயார்
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் நேற்று அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் […]

  • railway track flood chennai
    சென்னையை மிரட்டும் மழை ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் நேற்று அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் கனமழை பெய்தாலும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ […]

  • rain alert
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை
    Posted in: அண்மை செய்திகள்

    இன்றுமுதல் அடுத்த 5நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் 30 முதல் நவம்பர்3 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 30ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும். அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழகம் , புதுச்சேரி, கேரளா, ஆந்திராவின் கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் […]

  • farmer sucide
    புதுக்கோட்டையில் பரபரப்பு – விவசாயி தற்கொலை
    Posted in: அண்மை செய்திகள்

    புத்துக்கோட்டையில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை கீரனூர் வங்கியில் பழனியப்பன் என்ற விவசாயி ஒருவர் தன் குடும்ப சுழலிற்க்காக கடன் வாங்கியிருந்தார். அவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார். வங்கியிலிருந்து கடனை திரும்ப செலுத்த வற்புறுத்தியதால் விவசாயி பழனியப்பன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையை திசைதிருப்ப போலீஸார் முயற்சிப்பதாக பழனியப்பன் குடம்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

  • government bus half ticket
    உஷார்: இனி அரசு பேருந்தில் ‘அரை டிக்கெட்டிற்கு’ வயது சான்றிதழ் கட்டாயம்
    Posted in: அண்மை செய்திகள்

    அரசு பேருந்தில் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை, மூன்று வயது முதல் 12 வயது வரை ‘அரை டிக்கெட்’ எடுத்து கொள்ளலாம். ஆனால் நடத்துனருக்கும் பயணிகளுக்கும் ‘அரை டிக்கெட்’ எடுப்பதில் பிரச்னை வருவதால் இனி அரை டிக்கெட் எடுக்க வயது சான்றிதழ் அவசியம் என சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாண்டி கூறியுள்ளார். குழந்தைகள் வயதில் சந்தேகம் ஏற்படும் பொழுது நடத்துனர் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் […]

  • Chennai youth who climbed on top of a cell phone towe
    சென்னையில் செல்போன் டவரில் நின்று கொண்டு போராட்டம் செய்த மாணவன்
    Posted in: அண்மை செய்திகள்

    சென்னையில் MRC நகரில் இருக்கும் செல்போன் டவர் ஒன்றின் மேல் ஏறி நின்று கொண்டு மாணவன் ஒருவன் போராட்டம் செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் செய்த மாணவன் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைக்கும் தீர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளான். அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளி கொண்டுவர வேண்டும் என்ற […]

  • muslimwomen punished
    மதம் மாறி திருமணம் செய்த பெண்ணை தண்டித்த அமைப்பு
    Posted in: அண்மை செய்திகள்

    கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ‘ஜெஸிலா’ என்ற பெண் ‘டிஸ்கோ டோமி’ என்ற கிறிஸ்துவ மதத்தை சார்ந்த ஒரு நபரை காதலித்து வந்தால். கடந்த 18ம் தேதி ஜெஸிலா அவர் தயார் மற்றும் தந்தை ஆகியோரின் சம்மதத்துடன் டிஸ்கோ டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டால். இதனை தொடர்ந்து அங்குள்ள இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நபர்கள் ஜெஸிலா மற்றும் அவரது குடும்பத்தினரை சமூகத்தைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு யாரும் எவ்வித உதவியும் செய்யக்கூடாது. அவர்கள் குடும்பத்துடன் முஸ்லீம் […]