அண்மை செய்திகள்

  • bike traveling
    இனி பைக்கில் டபுள்ஸ் செல்ல தடை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    Posted in: அண்மை செய்திகள்

    கர்நாடகாவில் பைக்கில் டபுள்ஸ் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளது. முன்பாகவே இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்க கூடாது என்ற சட்டம் நடைமுறையிலுள்ளது. தற்பொழுது இரண்டு பெரும் செல்ல கூடாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதாவது, 100 சிசி-க்கு குறைவான வாகனங்களில் இரண்டு பேர் செல்ல கூடாது என்ற அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தில் ஏற்படும் விபத்தால் அதிக உயிரிழப்பு ஏற்படுகின்றது. அதனை குறைக்கும் நோக்கத்தில் இந்த சட்டம் அமலுக்கு […]

  • Organ donation
    தமிழக அரசுக்கு கோரிக்கை – உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்
    Posted in: அண்மை செய்திகள்

    வேலூர் மாவட்டம் அருகே தேவரிஷிகுப்பத்தை சேர்ந்த பால் வணிகர் சேட்டு என்பவர் கடந்த 19ம் தேதி பைக்கில் சென்றபொழுது விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு பொருத்தப்பட்டது. மேலும் இதுபோல் உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • reserve bank of india announced that its not mandatory to link aadhar
    வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க தேவையில்லை – ரிசர்வ் வங்கி அதிரடி
    Posted in: அண்மை செய்திகள்

    சில மாதங்களுக்கு முன்பு சில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது. வங்கி கணக்கு, பான் கார்டு , ஓட்டுநர் உரிமம் , போன் நம்பர் இப்படி அனைத்துடனும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க டிசம்பர் 31வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இல்லையெனில் வங்கி கணக்கு மூடப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு செய்தி இணயதளம் […]

  • air pollution list
    காற்றில் மாசு – சென்னைக்கு 9வது இடம்
    Posted in: அண்மை செய்திகள்

    நாடு முழுவதும் அக்டோபர் 18ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி தினத்தன்று சென்னை பகுதி முழுவது புகையால் மூடப்பட்டது. தற்பொழுது வெளியிட்ட தேசிய அளவிலான மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் பிவாடி முதலிடத்திலும், தமிழகத்தின் சென்னை 9வது இடத்திலுமுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டது அதனால் காற்றில் ஏற்பட்ட மாசை கண்காணித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மாநகரம் 9வது இடத்தை பிடித்துள்ளது.

  • government bus rate issue
    அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
    Posted in: அண்மை செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. தற்பொழுது அதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு பணிக்கு திரும்புவோடரிடம் அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். சில முக்கிய ஊர்களிருந்து சென்னை, விழுப்புரம், பெங்களூர் போன்ற ஊரிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ.100 அதிகம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் போன்ற இடத்திற்கு உரிய பணம் செலுத்தியும் புறவழிசாலையிலேயே இறக்கிவிடுவதாக பயணிகள் […]

  • Kuttralam tourist vistors increased
    குற்றாலத்தில் போக்குவரத்து நெரிசல் – சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது
    Posted in: அண்மை செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் குற்றாலத்திற்க்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா தலத்தில் ஒன்றானது குற்றாலம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் குற்றால சீசன் என்பர். மே மாத இறுதி முதல் ஆகஸ்ட் வரை குற்றாலத்தில் சாரல் மழை பெய்யும். இந்த வருடம் சீசன் நேரத்தில் அதிகம் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ள்ளதால் குளிப்பதற்கு பல முறை தடை விதிக்கப்பட்டது. இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை […]

  • Air Pollution
    சென்னையில் காற்று மாசு நேற்று அதிகரித்துள்ளது
    Posted in: அண்மை செய்திகள்

    சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று 300மைக்ரான் அளவுக்கு மாசு அதிகரித்துள்ளது என அமெரிக்க துணை தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்டாசு வெடிப்பதால் காசு மாற்று ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை குறைந்த அளவில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, ஆனாலும் இந்தமுறை தான் காற்றில் அதிகம் மாசு ஏற்பட்டுள்ளது. இதற்க்கு தரை காற்று வீசாததே காரணம் என அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

  • chances to heavy rain in tamilnadu today
    எச்சரிக்கை – தமிழகத்தை மீண்டும் உலுக்க போகும் கனமழை
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சிலநாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இன்று புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை […]

  • deepavali special bus
    தீபாவளி சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங் ஆரம்பமானது
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழக அரசு தீபாவளிக்கான சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங்களை தொடங்கியுள்ளது. அக்டோபர் 15 முதல் 17 வரை சென்னையிலிருந்து 11,645 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் நெருக்கடியை குறைக்க வெவ்வேறு ஊரிற்கு தனி தனி பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீ புக்கிங் ஆரம்பித்து அதிவேகமாக பஸ் புக் ஆகிவருவதால் பலரும் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தனியார் பேருந்துகள் டிக்கெட் விலைகளை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளனர் 2500ரூ […]