சினிமா

 • ஒரே நேரத்தில் 3 படங்களின் 2-ம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
  Posted in: கோலிவுட், சினிமா

  ஒரு காலத்தில் ஆங்கில படங்களில் மட்டுமே ஒரு படத்தின் பல பாகங்கள் வெளியாகி வந்தன. இப்போது தமிழ் படங்களிலும் ஒருமுறை வெற்றி பெற்ற படம் பல பாகங்களாக தயாராகி வருகின்றன. சூர்யா நடித்த ‘சிங்கம்‘ படம் மூன்று பாகமாக வெளிவந்து வெற்றிநடை போட்டது. ‘சென்னை-28’, ‘பசங்க’ உள்ளிட்ட படங்களும் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ (வி.ஐ.பி), ‘மாரி’, ‘கொடி‘ ஆகிய படங்களும் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கிறது. இதில் ‘வேலையில்லா […]

 • movie
  இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த படம்
  Posted in: கோலிவுட், சினிமா

  புது வரவுகளாக பல கதாநாயகன் கதாநாயகி முதன் முதலாக அறிமுகமான படங்கள் வாராவாரம் அதிகம் வருகின்றது. ஆனால் அனைத்து படமும் மக்களிடம் சேருகின்றது என்பது கேள்வி குறிதான். சமீபத்தில் வந்த புது படமான காதல் கண்கட்டுதே படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதாக படம் பார்த்த அனைவரும் கூறுகின்றனர் இந்த போட்டிகள் நிறைத்த சினிமா உலகத்தில் புதுமுக நாயகன் நாயகி நடித்த படம் வெகுவாக ஈர்த்து உள்ளது. பல இயக்குனர்கள் பாராட்டி உள்ளனர் அது மட்டும் இல்லாமல் […]

 • punch dialog
  வேலைக்காரன் பஞ்ச் டயலாக்
  Posted in: கோலிவுட், சினிமா

  சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பொருத்தமான பஞ்ச் டயலாக்குகளை சமூக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு படக்குழுவினர் சமீபத்தில் ரசிகர்களை கேட்டு கொண்டிருந்தனர். அந்த வகையில் ரசிகர் எழுதிய பஞ்ச் டயலாக் ஒன்று தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பஞ்ச் டயலாக் இதுதான். “புயலாலும் மழையாலும் கரைகிறவன் இல்லடா, உழைப்பால மெருகேறின ஆலமரம்டா வேலைக்காரன். […]

 • ஜி.வி. பிரகாஷ் படங்களுக்கு இசையமைக்கும் இளையராஜா, ரஹ்மான்!
  Posted in: கோலிவுட், சினிமா

  ஒரே சமயத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இருவேறு படங்களுக்கு இளையராஜாவும் ரஹ்மானும் இசையமைக்கிறார்கள்.  ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் 9 பாடல்கள்.  அடுத்ததாக பாலா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். இந்தப் படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஒரே சமயத்தில் இருபெரும் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ் அதிர்ஷ்டக்காரர்தான் என்று கோலிவுட்டில் பேசி கொள்கிறார்களாம்.

 • ரஜினி ஜோடியாக வித்யா பாலன்?
  Posted in: கோலிவுட், சினிமா

  இயக்குநர் பா.இரஞ்சித் – ரஜினி மீண்டும் இணையும் படத்தில் ரஜினி ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கினார். இந்தப் படம் சமீபத்தில் வெளியானது.  இப்போது ரஜினி – பா. இரஞ்சித் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar films) தயாரிக்கிறது. ஷங்கரின் 2.0 படத்துக்குப் பிறகு இது ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கபாலி படத்தில் முதலில் வித்யா […]

 • நயன்தாரா நடித்து வரும் புதிய படம்
  Posted in: கோலிவுட், சினிமா

  கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து வருகிறார். நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் ‘அறம்’ ஒரு கிராமத்தின் தண்ணீர் தேவைக்காக கலெக்டர் ஒருவர் களமிறங்கும் கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தக்கட்டமாக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக […]

 • பாகுபலி இரண்டாம் பாகத்தில் ஷாருக்கான்?
  Posted in: கோலிவுட், சினிமா

  எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஜூலை 2015 -ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் என பல நடிகர் நடிகைகள் நடித்தனர். அதுமட்டும் இல்லாமல் இப்படம் வசூல் ரீதியாகவும்  பெரும் சாதனைப் படைத்தது. இரண்டு பாகமாக தொடங்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள் இந்த பாகத்திலும் […]

 • சி3 வெற்றி – ஹரிக்கு பரிசளித்த சூர்யா
  Posted in: கோலிவுட், சினிமா

  சிங்கம்3 படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் சூர்யா. சூர்யா -ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான சி3 பிப்ரவரி 9 அன்று வெளியிடப்பட்டது. அனுஷ்கா,ஸ்ருதிஹாசன் என இரு ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்வதால் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை 100 கோடிக்கும் அதிகமாக  வசூல் ஆகியிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சூர்யா டொயோட்டா ”Fortuner” காரை இயக்குநர் ஹரிக்கு பரிசாக வழங்கி உள்ளார். […]