தொழில்நுட்பம்

 • Iphone
  இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் நிறுவனம்
  Posted in: தொழில்நுட்பம்

  உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது ஐபோன்களை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வர தொடங்கி உள்ளது. தாய்வானை சேர்ந்த விஸ்ட்ரன் பெங்களூருலில் தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாகவும், அங்கு ஐபோன்கள் மட்டும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனால் இந்தியாவில் ஐபோன் விற்பனையை அதிகரிக்க தயாரிப்பு ஆலையை நிறுவ இருப்பதாக தகவல் வருகின்றது. இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்க இருக்கும் விஸ்ட்ரன் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE சாதனங்களை தயாரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

 • 104 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி – சி37
  Posted in: தொழில்நுட்பம்

  இந்திய விண்வெளி ஆய்வுத்துறையான இஸ்ரோவின் புதிய மைல்கல்லாக ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி – சி37 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏழு நாடுகளைச் சேர்ந்த 104 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற் கொள்ளை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுத்தப்பட உள்ளன. 104 செயற்கைகோள்களின் மொத்த […]

 • காற்றின் ஆற்றலால் இயங்கும் தொடர் வண்டி
  Posted in: தொழில்நுட்பம்

  தினம் தோறும் மின்சார ரயிலில் பல லட்சம் மக்கள் பயணம் செய்கின்றார்கள். “5500” மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்கள் “1.2” பில்லியன் கிலோ வாட் மின்சாரத்தைச் செலவிடுகின்றன. இந்த மின்சாரத்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பூமியின் வளங்கள் ஒவ்வொரு நாளும், ஏன் தினமும் வீணாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த மின்சார ரயில்கள் தினம் தோறும் பல கிலோ டன் கார்பன் டை ஆக்ஸிடை காற்றில் கலக்கிறது. இதனால்  இவற்றின் அளவைக் குறைப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் முடிவு […]

 • ஹீரோ பேஷன் புரோ i3s
  Posted in: தொழில்நுட்பம்

  ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எப்போதும் வாடிக்கையாளரின் கவனத்தை பெற ஏதேனும் புதிதாக முயன்று கொண்டு இருப்பார்கள்..தற்போது ஹோண்டா நிறுவனம் பைக் ஒன்றை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தி உள்ளது .   ஹீரோ  பேஷன்  புரோ தானியங்கி ஹெட்லைட் (AHO-Automatic Headlight On) மற்றும்Herosகாப்புரிமை பெற்ற i3s தொழில்நுட்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. முதலில்  i3s தொழில்நுட்பம் என்னவென்று பார்ப்போம். ஹீரோ மோட்டோகார்ப் தான் முதன்முதலில் இந்த i3s தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. i3s என்பது பேட்டரியில் இயங்கும் சென்சார் சர்க்யூட். இது என்ஜின் […]

 • smart watch sign verifier
  போலி கையொப்பத்தை கண்டுபிடிக்கும் செயலி
  Posted in: தொழில்நுட்பம்

  இன்று உலகம் முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்களின் கையொப்பத்தை வைத்துதான் பணம் பரிமாற்றம் செய்கின்றார்கள். இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் பென் , டிஜிட்டல் டேப்லெட் போன்ற அதிநவீன தொழிநுட்பத்தில் வங்கிகள் அதனை  சேகரித்து வைத்துக்கொள்கின்றனர்கள். இந்த சூழ்நிலையில் அந்த கையழுத்துக்கள் போலி ஆனதா இல்லை உண்மையானதா என்று கண்டுபிடிக்க முடியாத நிலை உருவாகின்றது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு செயலியை கண்டுபிடித்து இருக்கின்றனர். அந்த செயலியை எந்த ஒரு ஸ்மார்ட் வாட்ச்சிலும் பதிவேற்றம் செய்துவிட்டு […]

 • மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயங்குதளம் யுஎஸ்பி டிரைவ் மூலம் விற்பனை அறிமுகம்
  Posted in: தொழில்நுட்பம்

  மைக்ரோசாப்ட் நிறுவனம் இயங்குதள பதிப்பை யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. விண்டோஸ் இயங்குதளம் குறுந்தகடு வழியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்பொழுது யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இச்சேவை விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 10 ப்ரோ பதிப்புகளில் அறிமுகமாக உள்ளது. 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகள் இரண்டும் விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 10 புரோ ஃபிளாஷ் டிரைவ்-ல் இருக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் […]

 • ஜியோனி இ-லைஃப் இ8 ஸ்மார்ட்போன் அறிமுகம்
  Posted in: தொழில்நுட்பம்

  சென்ற வாரம் சீனாவில் நடைபெற்ற அறிமுக விழாவில் ஜியோனி இ-லைஃப் இ8 ஸ்மார்ட்போன் அறிமுகபடுத்த பட்டது. இந்த போன் சீனாவில் ஜூலை 15 முதல் விற்பனைக்கு அமலாக உள்ளது. இதன் விலை 3,999 சீன யுவான்கள் ஏறக்குறைய இதன் இந்திய மதிப்பு ரூ.40,000 ஆகும். ஜியோனி இ-லைஃப் இ8 ஆன்டராயிடு 5.0 லாலிபாப் வகையை சேர்ந்த அமிகோ 3.1 இயங்குதளம் கொண்ட இரட்டை சிம் உள்ள ஸ்மார்ட்போன். இதன் சிறப்பம்சம் 24 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமரா மற்றும் […]

 • 15.5 இன்ச் ஸ்க்ரீனுடன் அசுஸ் ரோக் ஜிஎல்552 மடிக்கணினி ரூ.70,999ல் அறிமுகமாகியுள்ளது
  Posted in: தொழில்நுட்பம்

  கடந்த வியாழக்கிழமையன்று அசுஸ் ரோக் ஜிஎல்552 மடிக்கணினி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இ-காமர்ஸ் வலைதளங்களில் கருப்பு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது விண்டோஸ் 8.1 இயங்குதள வசதி கொண்ட இந்த ரோக் ஜிஎல்552, 15.6 இன்ச் எச்டி ஸ்க்ரீன், 8ஜிபி ரேம் மற்றும் இன்டெல் கோர் i7 HQ ப்ராஸசர் போன்ற சிறப்பம்சங்கள் கொண்டு அதிக கிராபிக் கேம்ஸ் மற்றும் அப்ளிகேஷன்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இண்டெல் எச்டி கிராபிக்ஸ் 3600 இத்துடன் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் வெப் கேம், […]

 • 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 4ஜி வசதி கொண்ட லெனோவா கே3 நோட் ரூ.9,999யில் அறிமுகமாகி உள்ளது
  Posted in: தொழில்நுட்பம்

  லெனோவா கே3 நோட் (lenovo k3 note) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.9,999க்கு அறிமுகபடுத்தபட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 8 பிற்பகல் 2 மணி முதல் தொடங்குகிறது, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். லெனோவா கே3 நோட் எல்டிஈ வசதியை கொண்டுள்ளது. இது ஆன்ட்ராயிடு லாலிபாப் 5.0 இயங்கு தளத்தில் இயக்கப்படுகிறது. இரட்டை சிம் வசதி கொண்டுள்ள இப்போன் 1.7 ஜிகா ஹெர்ட்ஷ் ப்ராசஷர், 2ஜிபி ரேம் , 13 எம்பி பின்பக்க மற்றும் 5 […]

 • கூகுள் தற்போது ஜிமெயிலில் தவறாக அனுப்பும் மெயில்களை திரும்ப பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது
  Posted in: தொழில்நுட்பம்

  சில நேரங்களில் நாம் தவறுதலாக மெயில் அனுப்பி விடுகிறோம் , தவறாக அனுப்பி இருப்பதை அறிந்தாலும் அதனை திரும்ப பெற இயலாது. இந்த சிக்கலுக்கு கூகுள் நிறுவனமே தற்போது தீர்வு கண்டுள்ளது. “Undo sent” என்ற வசதியை கூகுள் நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இவ்வசதியின் மூலம் அனுப்பிய மெயிலை இன்பாக்ஸ் சென்றடையும் முன்னே தடுத்து விடலாம். மெயில் அனுப்பிய 30 விநாடிக்குள் அண்டூ செண்ட் (Undo sent) பொத்தானை அழுத்தி விட்டால் மெயில் சென்றடையாது. ஏற்கனவே ஜிமெயில் […]