கிரிக்கெட்

  • சாதனை சேசிங் செய்த பாகிஸ்தான்
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டி பிடித்து சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சேசிங் இதுதான். 2006-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். இலங்கையில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் சீனியர் வீரர் யூனிஸ்கான் புதிய உலக சாதனையும் படைத்தார். 4வது இன்னிங்சில் மட்டும் யூனிஸ்கான் இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். […]

  • இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
    Posted in: கிரிக்கெட்

    இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு ‘ஆஷஸ்’ என்று பெயர். 4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆஷஸ் போட்டி நடைபெறும். கடைசியாக 2013-14-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ‘ஆஷஸ்’ தொடரை 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை தோற்கடித்தது. இந்த தொடர் மொத்தம் 5 டெஸ்டுகளை கொண்டது. இதன்படி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு […]

  • டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் சாதனை
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இங்கிலாந்து உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 64 பந்துகளில் 158 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் சாதனை படைத்தார். மெக்கல்லம் ’13’ 4-ஸ் மற்றும் ’11’ 6-ஸ் எடுத்து இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டியில் உயர்ந்த ரன் குவித்த வீரராக உள்ளார், உலக அளவில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக அதிக ரன் குவித்த வீரர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார் .    

  • ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு கேப்டனாக ரஹானே தேர்வு
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளார். தோனி , விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஜூலை 7-ந்தேதி ஜிம்பாப்வேக்கு புறப்படுகிறது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையிலான குழு, இந்திய அணியை […]

  • 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தியது
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இலங்கை கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை-பாகிஸ்தான் 2-வது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது.  இலங்கை அணி 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரசாத் “மேன் ஆப் தி மேட்ச்” பட்டதை தட்டிச் சென்றார். மூன்றாவது போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற உள்ளது.

  • இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நோக்கி ஜூன் 29ம் தேதி சுற்றுபயணம்
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    ஜிம்பாப்வேவில் ஜூலை 10 முதல், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடக்கவிருக்கிறது. இதில் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும், இரு டி20 போட்டிகளும் நடைபெறும். இப்போட்டிகள் ஜூலை 10 முதல் தொடங்கி 19 தேதி வரை நடைபெறவிருக்கிறது என ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இந்திய அணி ஜூன் 29ம் தேதி ஜிம்பாப்வே பயணம் மேற்கொள்கிறது.

  • மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேசத்தை தோற்கடித்தது
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வென்றது. மகேந்திர சிங் தோனி 77 ரன் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு திறவுகோலாக அமைந்தார். தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஆட்டக்காரர்களும் சிறப்பாக ஆடினர். வங்கதேச இளம் வேகபந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் மூன்று போட்டிகளிலும் 13 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் பட்டத்தை தட்டி சென்றார்.

  • 20 ஓவர்க்கான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    20 ஓவர்க்கான கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்தது.

  • இந்திய வங்கதேச இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    இந்திய-வங்க தேச இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் தொடர்க்கான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஷெரெ பங்கள தேசிய விளையாட்டு மைதானத்தில்  நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியின் வெற்றியை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

  • இரண்டாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி, வங்கதேசம் தொடரை வென்றது
    Posted in: கிரிக்கெட், விளையாட்டு

    2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி, ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது வங்கதேச அணி. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான முஸ்தபிஸுர் ரஹ்மான், அந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.