தமிழகத்தில் நேற்று அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. 2015ம் ஆண்டைப்போல் இந்த ஆண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்படையாமல் இருக்க மீட்ப்பு படையினர் தயார் நிலையிலுள்ளனர்.
இதுமட்டுமின்றி தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, அதை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிப்படையாது என தெரிவித்துள்ளனர். பாதிப்பை தடுப்பதற்காக அரசு சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலவச உதவி எண்ணங்கள் அறிவிப்பு மற்றும் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்ப்பு படையினர் தயார் நிலையிலுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் அரக்கோணம் முகாமிலிருந்து குழுவுக்கு 45வீரர்கள் என 9குழுவாக பிரிந்துள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் பதற்றப்படாமல் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும்.