சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விலையை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி

Fans gets shocked about the ticket rate of chepauk stadium

இந்திய அணி இலங்கையுடன் தனது சுற்றுப்பயண ஆட்டங்களை முடித்துவிட்டு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் செப்டம்பர் 17ம் தேதி தனது சொந்த மண்ணில் மோதவுள்ளது . ஐந்து ஒருநாள் போட்டி மூன்று டி 20 போட்டி நடைபெறும் நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 17ம் தேதி நடக்கவுள்ளது.

இதை அறிந்து ரசிகர்கள் டிக்கெட்டின் விலை அறிய சென்ற பொழுது குறைந்த பட்ச டிக்கெட்டின் விலை 1200ரூ என தெரிவித்தனர். ஜி.எஸ்.டி வரியை காரணம் காட்டி டிக்கெட்டின் விலையை உயர்த்தியுள்ளனர். இதனால் ரசிகர்கள் டிக்கெட் பெற முடியாமல் தவிக்கின்றனர். இதற்க்கு முன்னே குறைந்த பட்ச டிக்கெட்டின் விலை 750ரூபாயாக இருந்தது இப்பொழுது ஜி.எஸ்.டி வரியை காரணம் காட்டி 450ரூபாய் உயர்த்தியுள்ளனர். இதனை தொடர்ந்து 2400ரூ, 4800ரூ, 8000ரூ, 12000ரூ என டிக்கெட்டின் விலை சரம்வாரியாக உயர்த்துள்ளது. இந்த குறைந்த பட்ச கட்டணத்தையாவது குறைக்க வேண்டும் என கிரிக்கெட் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.