40,000 ஆயிரத்தை தாண்டிய கொரோனா மரணங்கள் – தொடரும் சோகம்

இந்தியாவில் இதுவரை 1,397 நபர்கள் பாதிக்க பட்டும், 35 பேர் மரணம் அடைந்தும் உள்ளனர். இன்னும் முழுமையான கொரோன சோதனை செய்தால் முழு நிலவரம் தெரிய வரும். இருப்பினும் இது வரை உள்ள நிலை கட்டுக்குள் இருப்பதாக அரசு தெரிவிக்கிறது.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இந்த நோயின் தாக்கம் காரணமாக மரணங்களும், தொற்று ஏற்பட்ட நபர்களின் எண்ணிக்கை (8,00,000) எட்டு லட்சமாக மிக அதிகமாகி உள்ளது.

இந்த நாளில் மட்டும் ஸ்பெயினில் 800க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது அந்த நாட்டின் ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

இத்தாலியில்தான் இந்த நோயின் பாதிப்பு மிக அதிகம் 1,05,792 நபர்களுக்கு தொற்றும், 12,428 மரணங்களும்,
15,729 பேர் குணமடைந்ததும் உள்ளனர். அங்கு தற்போது புது நோயாளிகளின் எண்ணிக்கை குறைகிறது.

ஜெர்மனியில் மொத்தமாக 650 மரணங்களும் 67,000+ நபர்களுக்கு தொற்றும் ஏற்பட்டு உள்ளது .

அமெரிக்காவில் இது வரை 1,64,700 பேர் பாதிக்க பட்டும் 3170 பேர் இறந்தும் உள்ளனர்

இது போன்ற பல நாடுகளின் எண்ணிக்கை நோய் தொடங்கிய நாடு என்று சொல்ல படுகின்ற சீனா வின் எண்ணிக்கை மரணங்கள் 3300ஐ தாண்டிவிடும்.

ஒரே நம்பிக்கை இது வரை 1,72,000 பேர் குணமடைந்து உள்ளது ஆறுதலான விஷயம் ஆகும்.