மிக பெரிய தொழில் அதிபரான மல்லையாவை இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை இன்று லண்டன் கோர்ட்டில் தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு வங்கியிலிருந்து ரூபாய்.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய தொழில் அதிபரே விஜய் மல்லையா. அவர் வாங்கிய கடன் திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் அவர் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் தற்பொழுது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை திரும்ப இந்திய நாட்டிற்கு அனுப்புமாறு மத்திய அரசு இங்கிலாந்து அரசை கேட்டுள்ளது. அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலிஸார் சில மாதங்களுக்கு முன்பாக கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்பொழுது அவரை நாடு கடத்தக்கோரி லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் வருகிற 14ம் தேதி வரை தொடர்ந்து நடக்கவுள்ளது. இதற்காக விஜய் மல்லையா கோட்டில் ஆஜராகிறார்.