கோர தாண்டவம் ஆடும் ‘ஓகி புயல்’ – 4 பேர் பலி – 17 பேர் மாயம்

cyclone kanyakumari

கன்னியாகுமரி: ஓகி புயலில் சிக்கி மீனவர்கள் 4பேர் பலியாகிவுள்ளனர் மேலும் 17பேர் மாயமாகிவுள்ளனர் அவர்களை மீட்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென புயலாக உருவாகியது. திடீரென விஸ்வரூபம் எடுத்த ஓகி புயல் கன்னியாகுமரியை உலுக்கியது. இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு நடுக்கடலில் சிக்கி அங்கு அடித்த பலத்த காற்றால் கவிழ்ந்தது. இதில் 4பேர் பலியாகிவுள்ளனர் மேலும் 17பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

cyclone kanyakumari

ஓகி புயலின் தாக்கம்:

மணிக்கு 70 முதல் 80கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் கன்னியாகுமாரி மாவட்டத்தின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tagged with:     , ,