தமிழக அரசு தீபாவளிக்கான சிறப்பு பேருந்து ப்ரீ புக்கிங்களை தொடங்கியுள்ளது. அக்டோபர் 15 முதல் 17 வரை சென்னையிலிருந்து 11,645 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் நெருக்கடியை குறைக்க வெவ்வேறு ஊரிற்கு தனி தனி பேருந்து நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீ புக்கிங் ஆரம்பித்து அதிவேகமாக பஸ் புக் ஆகிவருவதால் பலரும் டிக்கெட் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தனியார் பேருந்துகள் டிக்கெட் விலைகளை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியுள்ளனர் 2500ரூ வரை டிக்கெட் விற்பனை செய்து வருகின்றனர்.