டென்மார்க் ஓபன் : சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

badminton denmark open

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகிய மூவரும் அடுத்த சுற்றிற்கு முன்னேறினர். இதில் சோகம் ஆடையை வேண்டிய விஷயம் என்னவென்றால் பாட்மிண்டனின் சிறந்த வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா ஸ்பெயின் வீராங்கனை கலோரினா மரினை எதிர்கொண்டார். 43நிமிடம் நீடித்த இந்த போட்டியின் முடிவில் 22-20, 21-18 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார் சாய்னா நெவால்.

பி.வி.சிந்து மற்றொரு முதல் சுற்றில் சீனாவின் சென் யுபேய்யிடம் 17-21, 21-23 என்ற கணக்கில் வீழ்ந்தார். பி.வி.சிந்து முதல் சுற்றில் வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 21-15 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார் மற்றும் பிரணாய் முதல் சுற்றில் 21-18, 21-19 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார்.

சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகிய மூவரும் டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றை வென்று 2வது சுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.

Tagged with:     , , , , ,