“அகியூல்லா 250” புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம்

டி.எஸ்.கே. ஹையோசங்க்(DSK Hyosung) நிறுவனம் சார்பில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட “அகியூல்லா 250”(Aquila 250) மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் சமீபத்தில்  அகியூல்லா 250 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்து அந்தக் குழுமத்தின் தலைவர் சிரீஷ் குல்கர்னி பேசியது:
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆடம்பரமான, புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் அகியூல்லா 250 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளோம்.

மெட்டல் கிரீன், கார்பன் பிளாக், டெசர்ட் பிரவுண் உள்ளிட்ட 3 வண்ணங்களில் எளிதாக கையாளும் வகையில் கிளட்சும், 5 கியர் கொண்ட மோட்டார் சைக்கிளின் விலை பெங்களூரில் ரூ.2.94 லட்சத்திலிருந்து தொடங்குகிறது என்று கூறினார்.