பாபநாசம் பொண்ணு இப்போ ஹீரோயின்

esther anil

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ என்னும் படத்தில் மோகன்லாலின் இளைய மகளாக நடித்து அனைவர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் தான் எஸ்தர் அனில்.

அந்த படத்தில் இவரது அசத்தலான நடிப்பை பார்த்து தான் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ என்னும் படத்தில் கமலின் இளைய மகளாக நடிக்க வைத்துள்ளனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ரீமேக்கிலும் அந்த கதாபாத்திரத்திற்க்கு அவரையே நடிக்க வைத்துள்ளனர்.

2001லேயே குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானவர் ‘எஸ்தர் அனில்’ இதுவரை 20படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது 17வயதை தாண்டியுள்ள எஸ்தர் அனில் இயக்குனர் ஷாஜி என்.காரூண் இயக்கி வரும் ‘ஊளு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

Tagged with:     , ,