பேஸ்புக் 360 ஆப் வெளியீடு

பேஸ்புக் இன்றைய சமுதாய மக்கள் அதிகம் உபயோகிக்கின்றனர் அதிலும் இளைய சமுதாயம் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்றனர். பேஸ்புக் புதிய செயலி ஒன்றை வெளியிட்டுயுள்ளது .

பேஸ்புக் நிறுவனம் புதிய பேஸ்புக் 360 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு இம்சை என்னவென்றால் 360 டிகிரி புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். சாம்சங்  விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களில் வேலை செய்யும் இந்த செயலியில் 25 மில்லியன் 360 டிகிரி புகைப்படங்களும் 10 லட்சத்திற்கும் அதிகமான 360 டிகிரி வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன.

கியர் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான பேஸ்புக் 360 செயலியை டவுன்லோடு செய்ய கியர் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி கொண்ட சாம்சங் சாதனத்தில் ஆகுலஸ் செயலியில் புதிய பேஸ்புக் 360 செயலியை தேடலாம். இதோடு ஆகுலஸ் இணையதளத்திலும் புதிய பேஸ்புக் 360 செயலியை டவுன்லோடு செய்யலாம்.

பேஸ்புக் 360 செயலியை கொண்டு 360 டிகிரி புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு பல வகையான ரியாக்ஷன் வழங்க முடியும். இதோடு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்குவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த செயலி பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது. பலரும் இந்த சிறப்பு அம்சத்தால் விரும்பி பதிவிறக்கம் செய்கின்றனர்

Tagged with:     , ,