இரத்த தானம் செய்ய உதவும் பேஸ்புக்

facebook blooddonor

இந்தியாவில் பல மில்லியன் மக்கள் பேஸ்புக் பயனப்டுத்தி வருகின்றனர். தற்பொழுது இந்தியாவில் இரத்த தானம் செய்ய எளிய முறையை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழியமாக இரத்தம் தேவை படுபவர்கள் எளிய முறையில் இரத்தம் பெற்று கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

இந்தியாவில் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் முறையில் பேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய அப்ப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தன்னார்வ அமைப்புகள்,ரத்த வங்க மற்றும் கொடையாளர்கள் ஒருங்கிணைந்து இரத்த தானத்தை எளிதாக்கும் முறையை உருவாக்கியுள்ளது.

ஒரு நபருக்கு ரத்தம் தேவைப்படும் அவசரமான சூழ்நிலையில் இதில் பதிவு செய்தால் அருகில் உள்ளவர்கள் மூலமாக ரத்தம் பெற்று கொள்ளலாம். இரத்த கொடையாளர்கள் பேஸ்புக் மூலம் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இரத்தம் தேவைப்படும் சூழ்நிலையில் இதில் பதிவு செய்தால் அருகிலுள்ள கொடையாளர்கள் மூலம் இரத்தம் பெற்று கொள்ளலாம்.

Tagged with:     , , ,