செவ்வாய் கிரகத்தில் உருளைக் கிழங்கு

சூரியக் குடும்பத்தில் பல கோள்கள் இருந்தாலும் சில கோள்களில் மட்டுமே உயிர் வாழவும் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். ஆனால் சூரியக்  குடும்பத்தில் உள்ள கோளிகளில் பூமியில் மட்டுமே உயிர் வாழ்வதற்கான மற்றும் உயிர் வாழ தேவையான அடிப்படைகள் உள்ளனர்.

விஞ்ஞானிகள் வேற எந்த கோள்களில் விவசாயம் பண்ணலாம் என்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் சேவை கிரகம் இடம் பிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உருளைக்கிழங்கு செடியினை விவசாயம் செய்யலாம் என்று விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

இந்தியா ,உள்ளிட்ட பல மேலை நாடுகளில்  செவ்வாய் கிரக ஆய்வுகளில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக தெற்கு பெருவியாவில் உள்ள பாம்பாஸ் டிலா ஜோயா பாலைவனம் ஒன்றில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.

செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையையும், அந்த கிரகத்தில் இருப்பது போன்ற கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் அந்த பாலைவனத்தில் ஏற்படுத்தப்பட்டது.

அங்கே உள்ள வெப்பநிலையாலே உருளைக்கிழங்கு விளைவிக்க அதிக சாத்திய கூறுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர்.

Tagged with:     , ,