பண்டிகை நாள் காரணமாக வெள்ளிக்கிழமை(செப்.29) முதல் திங்கள்கிழமை (அக்.02) வரை வங்கிகளுக்கு விடுமுறை. இன்று வங்கிகள் வழக்கம் போல் இயங்கும். நாளை முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை.
நாளை வெள்ளிக்கிழமை(செப்.29) ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை, (செப்.30) சனிக்கிழமை விஜயதசமி முன்னிட்டு விடுமுறை, (அக்.01) ஞாயிற்றுக்கிழமை மறுநாள் திங்கள்கிழமை(அக்.02) காந்திஜெயந்தி முன்னிட்டு விடுமுறை.
ஆகவே மக்கள் அனைவரும் தங்களில் வங்கி வேலைகளை இன்றே முடித்துக்கொள்வது நல்லது. வங்கி விடுமுறை நாட்களில் ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு பணம் மாற்றம் செய்ய இயலாது. விடுமுறை நாட்கள் காரணமாக ஏ.டி.ம்-களில் போதிய அளவுக்கு பணம் நிரப்பிவைக்க உத்தரவிட்டுள்ளதக வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.