சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் போஸ்டர் வெளியானது.

இன்றயை சினிமா உலகில் உள்ள பெரும் போட்டிகளுக்கு இடையே அதை உடைத்து வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகர்தான் சிவகார்த்திகேயன். இவர் ரெமோவை அடுத்து தற்போது நடிக்கும் படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இப்படம் உருவாகிவருகிறது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ் ராஜ், சினேகா, ரோஹினி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமையா, யோகி பாபு, மற்றும் சதீஷ் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

24 Am ஸ்டுடியோஸ் R.D. ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் First look போஸ்டர் வெளியானது. 29 செப்டம்பர் 2017 அன்று பூஜா விடுமுறையில் இப்படம் அணைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என்று அறிக்கை வெளியுட்டுள்ளனர்.