‘விஐபி2’ தொடர்ந்து, தனுஷின் மற்றொரு படமான ‘மாரி 2’ ஆரம்பமானது.

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான வெற்றிப்படம் ‘மாரி’. இப்படம் சென்ற ஆண்டு 17 ஜூலை 2015 ஆம் வெளியாகி வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் ஆதரவையும் பெருமளவும் பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் 2ஆம் பாகம் மிக விரைவில் உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் நேற்று அதாவது ‘மாரி’ முதல் பாகம் வெளியான அதே நாளில் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ‘மாரி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் இன்னும் சிலர் இந்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tagged with:     , , ,