கௌதம் கார்த்திக் நடிக்கும் ரங்கூன் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்தது

டைரக்டர் AR முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முத்துராமலிங்கம் படத்தை அடுத்து நடிக்கும் படம் ரங்கூன். Sana Makbul நாயகியாக நடிக்கிறார் இவர் மும்பையை சேர்ந்தவர் என்றும் தமிழில் இது முதல் படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் விக்ரம் RH இசையில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் தான் என படக்குழுவினர் முடிவெடுத்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அது முடியாமல் போகவே விக்ரம் RH இப்படத்திற்கு இசை அமைத்தார்.

விக்ரம் RH பிரபல இசையமைப்பாளர் G.V பிரகாஷ் குமாரின் உதவியாளராக பணிபுரிந்தார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். ஜூன் 9 படம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.