பணம் அனுப்பும் புதிய வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது

கூகுள் நிறுவனம் பல்வேறு வேலைகளை மக்கள் எளிதாக செய்யக்கூடிய வகையில் தினமும் புதிதாக மாற்றங்களை  புதிப்பித்து உள்ளன. அந்த வகையில் இப்போது கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் எளிமையான முறையில் பணம் பரிமாற்றம் செய்யும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.

 

ஜிமெயில் மொபைல் அப்ளிகேஷனில் மின்னஞ்சல் அனுப்புவது போலவே எளிதாக பணத்தை அனுப்பலாம். மின்னஞ்சலில் கோப்புகளை இணைத்து அனுப்பும் அட்டாச்மெண்ட்ஸ் (Attachments) ஐகானை க்ளிக் செய்தால் அதில் பணம் அனுப்பவதற்கான Send Money என்ற ஆப்ஷன் இருக்கும்.  அதன் மூலம் பணத்தை வேறு எந்த ஜிமெயில் முகவரிக்கும் அனுப்ப முடியும்.

 

கம்பியூட்டரில் என்றால் மெயில் அனுப்புவதற்கான Compose என்ற பட்டனுக்கு அருகில் சிறிதாக டாலர் ($) இருக்கும் அதை க்ளிக் செய்து பணத்தை அனுப்பலாம். பணம் அனுப்புவது மட்டுமின்றி பணத்தைக் கேட்கும் வசதியும் இருக்கிறது!