உஷார்: இனி அரசு பேருந்தில் ‘அரை டிக்கெட்டிற்கு’ வயது சான்றிதழ் கட்டாயம்

government bus half ticket

அரசு பேருந்தில் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை, மூன்று வயது முதல் 12 வயது வரை ‘அரை டிக்கெட்’ எடுத்து கொள்ளலாம். ஆனால் நடத்துனருக்கும் பயணிகளுக்கும் ‘அரை டிக்கெட்’ எடுப்பதில் பிரச்னை வருவதால் இனி அரை டிக்கெட் எடுக்க வயது சான்றிதழ் அவசியம் என சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாண்டி கூறியுள்ளார்.

குழந்தைகள் வயதில் சந்தேகம் ஏற்படும் பொழுது நடத்துனர் முழு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் இதனால் பணிகளுக்கும் நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. நடத்துனருக்கு சந்தேகம் ஏற்படும் பொழுது உயரத்தை கணக்கிடுவர் 130செ.மீ உயரத்திற்கு மேல் இருந்தால் முழு கட்டணம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உயரமாக இருப்பதால் இந்த சிக்கல் ஏற்படுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இனி பேருந்தில் அரை டிக்கெட் எடுக்க வேணுமென்றால் வயது சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்று சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பாண்டி கூறியுள்ளார்.