அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

government bus rate issue

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. தற்பொழுது அதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு பணிக்கு திரும்புவோடரிடம் அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். சில முக்கிய ஊர்களிருந்து சென்னை, விழுப்புரம், பெங்களூர் போன்ற ஊரிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ.100 அதிகம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் போன்ற இடத்திற்கு உரிய பணம் செலுத்தியும் புறவழிசாலையிலேயே இறக்கிவிடுவதாக பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி பெண்களுக்கு முன்பதிவில் கூடுதல் இட ஒதிக்கீடு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகையை காரணமாக வைத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , , ,