தியேட்டரில் பார்க்கிங் கட்டணம் குறைப்பு

parking rate

தியேட்டருக்கு படம் பார்க்க செல்பவர்களுக்கு அதிக சிரமமாக இருந்து வந்ததே இந்த பார்க்கிங் கட்டணம் தான். சில பெரிய மால்களில் சினிமா கட்டணத்தை விட பார்க்கிங் கட்டணமே அதகிகமாக இருந்து வந்தது. பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. அது குறித்து அரசு தற்பொழுது பார்க்கிங் கட்டணத்தை வரமுறைப்படுத்தி அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி பெருநகரங்களில் கார்களுக்கு 20ரூபாயும் இருசக்கர வாகனத்திற்கு 10ரூபாயும் வசூலிக்க வேண்டும், அதுபோல நகராட்சிகளில் கார்களுக்கு 15ரூபாயும் இருசக்கர வாகனத்திற்கு 7ரூபாயும் வசூலிக்க வேண்டும், பஞ்சாயத்துகளில் கார்களுக்கு 5ரூபாயும் இருசக்கர வாகனத்திற்கு 3ரூபாயும் வசூலிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பிற்க்கு நன்றி கூறி தயாரிப்பாளர் சங்கம் ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில் கூறியதாவது திரையரங்க கட்டணத்தினை உயர்த்தி வழங்குதல், திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவை அரசிற்கு அளித்தோம். இதற்க்கு அரசு உடனடியாக முடிவெடுத்துள்ளதற்கு நன்றி கூறி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tagged with:     , , ,