மலைப்பகுதியில் பலத்த மழை – குற்றாலத்தில் தண்ணீர் அதிகரிப்பு

kuttralam

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீடிர் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு நேற்று மதியம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர் அதிகரித்துள்ளதின் காரணமாக மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்திலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவெடிக்கையாக மெயின்அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைத்துள்ளனர். நீர் அளவு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.