மெர்சல் விளம்பரத்திற்க்கு உயர்நீதிமன்றம் தடை

Mersal movie issue

மெர்சல் படத்தின் டீஸர் நேற்று வெளிவந்துள்ளது வெளிவந்த சில நிமிடங்களிலேயே அதிக வியூஸ் மற்றும் லைக்ஸ்களை அல்லி குவித்துள்ளது. இந்த சந்தோசத்தை கொண்டாடி முடிப்பதற்குள் படத்தின் விளம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2014ம் ஆண்டில் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தேனாண்டாள் நிறுவனமோ தற்பொழுது தடை விதித்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். அதை பொருட்படுத்தாமல் உயர்நீதிமன்றம் விளம்பரத்திற்கு தடை விதித்துள்ளது. அக்டோபர் 3ம் தேதி வரை இது தொடரும் என கூறியுள்ளனர். இதனால் படம் ரிலீஸ் தேதி தள்ளிபோக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.

Tagged with:     , , ,