தொலைந்து போன ஆண்ட்ராய்ட் மொபைலின் டேட்டாவை அழிப்பது எப்படி?

how to erase data from android

நாம் அனைவரும் நமது மொபைல் போன்களில் தனிப்பட்ட புகைப்படம்,மெசேஜ் மற்றும் இன்னும் சில டேட்டாகளை சேமித்து வைத்திருப்போம். நமது மொபைல் போன் தொலைந்துவிட்டால் அது கையில் கிடைத்தவர்களுக்கு நமது டேட்டாவை எடுப்பது மிகவும் சுலபம். ஆதலால் தொலைந்து போன ஆண்ட்ராய்ட் மொபைலில் டேட்டாவை அழிப்பது எப்படி என தெரிந்து கொள்வது அவசியம். அதன் விவரம் இதோ

அதற்க்கான வழிமுறைகள்:

1. முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும் .

2. பிறகு உங்களது கூகுள் அக்கௌன்டை லாகின் செய்ய வேண்டும் .

3. இங்கு நீங்கள் பயன்படுத்திய மொபைலிகளின் டேட்டாவை பார்க்க முடியும்.

4. இதன் மூலமாக மொபைல் எங்கிருக்கிறது என்பதையும் அறிய முடியும். உங்கள் மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தால் இறுதியாக மொபைல் செயலில் இருந்த இடத்தை காண்பிக்கும்.

5. இதன் பிறகு அதில் Sound,Lock,Erase என மூன்று பட்டன் இருக்கும், அதில் Sound கிளிக் செய்தால் உங்கள் மொபைல் செயலில் இருந்தால் சத்தம் எழுப்பும். Lock பட்டன் கிளிக் செய்தால் உங்கள் மொபைல் lock செய்யப்படும். Erase பட்டன் கிளிக் செய்தால் உங்கள் மொபைலில் உள்ள அணைத்து டேட்டாகளும் அழிந்து விடும்.