உலக ஹாக்கி லீக் போட்டியில் சிறந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இணைந்துள்ளன. ஆட்டத்தின் ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் இடம்பெற்றன.
இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிரிவிலேயே மற்றொரு அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் என்பது விதிமுறை. அதனடிப்படையில் நேற்று புவனேசுவரத்திலுள்ள கலிங்கா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.
ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டம் தொடங்கி 6-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடிக்க முயன்றார் ரூபீந்தர் பால் சிங், ஆஸ்திரேலியா கோல் கீப்பர் அதை தடுத்துவிட்டார். ஆட்டம் ஆரம்பித்து 20-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு அடுத்த நிமிடமே ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் கோலை பதிவு செய்தது.
இதனையடுத்து இரண்டாவது பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் ஏதேனும் பதிவு செய்யவில்லை. ஆகையால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.