இந்தியா இலங்கைக்கான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அணி ஏமாற்றம்

ind vs sl 1st odi

இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீலடிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

இந்தியா அணியின் முதல் ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்புடிக்க முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 29ரன்களுக்கு 7முக்கிய விக்கெட்களை இழந்தது இந்திய அணி. அதற்க்கு பின்பு தோனி களம் இறங்கினார், அவருடன் குலதீப் யாதவ் தாக்கு பிடித்து ஆடினார்.

இந்திய அணியின் ஸ்கோர் 70ஆக இருக்கும் பொழுது குலதீப் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இலங்கை அணியின் கடும் பந்து வீச்சை எதிர்த்து தோனி நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். இறுதியாக இந்திய அணி 39.2 ஓவர்களில் 112 ரன்கள் குவித்துள்ளது. பின்பு 113ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 20.4 ஓவர்களில் 3விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Tagged with:     , , ,