நியூஸிலாந்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

ind vs nz

இந்தியா நியூஸிலாந்திற்கு இடையிலான டி20 தொடர் நேற்று நடைப்பெற்றது. இதில் இந்திய அணி 6ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. இந்தியாவுடன் சுற்று பயணம் மேற்கொண்ட நியூஸிலாந் அணி 3ஒரு நாள் போட்டி, 3டி20 போட்டி மேற்கொண்டது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா, இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி நேற்று முடிவுபெற்ற நிலையில் 2-1என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த டி20 போட்டி மழை காரணமாக 8ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8ஓவர்களில் 5விக்கெட் இழப்பிற்க்கு 67ரன்கள் எடுத்துள்ளது. 68ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூஸிலாந் அணி 8ஓவர்களில் 6விக்கெட் இழந்து 61ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்திற்கு எதிரான தொடரை முதல் முறையாக இந்திய அணி கைப்பற்றியது.

Tagged with:     , ,