நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53ரன் வித்தியாசத்தில் வென்றது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி முதலில் களம் இறங்கியது இந்திய அணி, முதலில் பேட் செய்த ரோஹித் சர்மா – ஷிக்கர் தவான் இருவரும் பாட்நெர்ஷிப் போட்டு கொண்டு இருவரும் தலா 80ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். அதற்க்கு பின்பு களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி 26ரன்கள் குவித்து 203என்ற இலக்குடன் ஆட்டத்தை முடித்தார்.
203என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி சரமாரியாக விக்கெட்களை இழந்தது. இந்த போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள ஆசிஷ் நெஹ்ரா போட்டியின் நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 149ரன்னிற்கு 8விக்கெட்களை இழந்து தோல்வியை சந்தித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையிலுள்ளது.