அபுதாபியில் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்

indians wons the lottory in abudhabi

அபுதாபியில் நடந்த சிறப்பு குழுக்கள் ஒன்றில் மேத்தியூ என்ற இந்தியர் ஒருவருக்கு 1.9மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக விழுந்தது. மேத்தியூ என்பவர் 7 தொடர்களை கொண்ட 183 என்ற டிக்கெட்டை அபுதாபியில் வாங்கியிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் வாங்கிய அந்த டிக்கெட்டிற்கு பம்பர் பரிசாக 1.9மில்லியன் டாலர் விழுந்தது.

மேத்தியூ என்பவர் கேரளாவை சேர்ந்தவர் இவருக்கு 1.9 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக விழுந்ததோடு மட்டுமில்லாமல் இன்னும் 6 இந்திய நபர்களுக்கு தலா ஒரு லட்சம் திராம் பரிசாக விழுந்தன. இதற்க்கு முன்பே கிருஷ்ணம் ராஜு என்பவர் 5மில்லியன் டாலர் பரிசாக வென்றது குறிப்பிடத்தக்கது. அபுதாபியில் நடந்த இந்த சிறப்பு குழுக்களில் இந்தமுறை அதிக இந்தியர்களே பரிசுகளை தட்டி சென்றனர்.