ஐ பி எஸ் தேர்வில் கணவனுக்கு காப்பி அடிக்க உதவிய மனைவி கைது

IPS officer Safeer Karim caught for cheating

நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எஸ் தேர்வில் அதிகாரி ‘சபீர்கரீம்’ என்பவர் தேர்வு நடைபெற்ற பொழுது காப்பி அடித்து மாட்டிக்கொண்டார். அவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வசூல்ராஜா படத்தில் பயன்படுத்தியவாரு ப்ளூடூத் இயற் போன் மூலம் வினாக்களுக்கு விடை பெற்று தேர்வில் எழுதிவந்துள்ளார். இதனை கண்காணிப்பு அதிகாரிகள் கவணித்து அவரது ப்ளூடூத் இயற் போனை கைப்பற்றினர்.

அவர் வினாக்களை சொல்ல சொல்ல அவரது மனைவி ஐதராபாத்திலிருந்து அதற்க்கான பதிலை கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘சபீர்கரீம்’ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி ‘ஜாய்சியும்’ ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். அவர் இதற்க்கு முன்பாகவே எழுதிய தேர்வுகளும் இது போலவே எழுதிருப்பார் என்ற சந்தேகம் எழுந்த்துள்ளது.