மீண்டும் விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட்

isro next mission on november

பிஎஸ்எல்வி கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்டு தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் மீண்டும் பிஎஸ்எல்வி ராக்கெட் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மிகுந்த எதிர்பார்ப்புடன் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் ஐஆர்என்எஸ்எஸ்-1 செயற்கைக்கோள் தோல்வியில் முடிந்தது. இதில் செயற்கைக்கோள் தனியாக பிரியும்பொழுது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இதற்க்கு கரணம் என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிஎஸ்எல்வி ராக்கெட் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மீண்டும்விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறியுள்ளார். முந்திய ஆராய்ச்சில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதில் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tagged with:     , ,