ஜியோவின் அதிரடி கேஷ்பேக் சலுகை

jio offer

ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு அதிரடி சலுகையை வெளியிட்டுள்ளது. ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 முதல் ரூ.2,599 வரை ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு 100சதவீதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையின் சலுகையாக ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் கேஷ்பேக் சலுகை அதற்க்கு பின்பு விலையில் மாற்றம் ஏற்படும் என்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த மாதமே மூன்றுமடங்கு கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது. இந்த சலுகை நவம்பர்10ம் -தேதி முதல் 25ம் தேதி வரை பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவித்துள்ளனர்.

இந்த புதிய அறிவிப்பின்படி, பிரைம் வாடிக்கையாளர்கள் ரூ.399க்கு ரீசார்ஜ் செய்தால் அவரின் கணக்கில் 8 தவனைகளாக ரூ.50 பரிமாறப்படும். அடுத்து, ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் ரிசார்ஜ் அனைத்திற்கும் , அந்த ரூ.50யில் கழித்துக் கொள்ளப்படும். இதற்காக ஜியோ நிறுவனம் பல்வேறு மொபைல் வாலட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேலும் பேடியம், மொபிவிக், அமேசான் பே, ஆக்சிஸ் பே, போன்பி, ப்ரீ-சார்ஜ் ஆகியவற்றின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்கள் அதிகபட்சமாக ரூ.300 வரை கேஷ்-பேக் பெறமுடியும். மீதமுள்ள தொகை அவர்களின் இ-வாலட்டுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

புதிய ஜியோ வாடிக்கையாளர்கள் பேடிஎம், மொபிவிக், அமேசான் பே, ஆக்சிஸ் பே, போன்பி, ப்ரீரீசார்ஜ் ஆகியவற்றின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்கள் ரூ.300, ரூ.100, ரூ.99, ரூ.75, ரூ.50 என கேஷ்பேக் பெற முடியும். ஏற்கனவே இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் ரூ.149, ரூ.35, ரூ.20, ரூ.15 என கேஷ்பேக் பெறலாம்.

மீதமுள்ள கேஷ்பேக் ஷாப்பிங் கூப்பன்களாக தரப்படும். அந்த ஷாப்பிங் கூப்பன்களை வைத்து இணையதளத்தில் ரூ.1,899க்கு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த கூப்பன்கள் அஜியோ.காம், ரிலையன்ஸ் டிரன்ட்ஸ்.காம். யாத்ரா.காம் ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும்.

Tagged with:     , , ,