அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

neet protest going in different collages

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்னும் கோரிக்கையை அவர்களைவைத்துள்ளனர்.

லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர் இன்று இரண்டாவது நாளாக அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளான இன்று கல்லூரி வாசலில் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு போராடி வருகின்றனர்.

நீட் தேர்விற்கு கட்டாயம் தடைவிதிக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. இது போல இன்று பல கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.