சூப்பர்மேன் மீசையை எடுக்க 160கோடி செலவு – என்ன கொடுமைடா இது

superman henry cavill

சமீபத்தில் வெளியான ‘ஜஸ்டிஸ் லீக்’ திரைப்படத்திற்க்காக சூப்பர்மேனின் மீசையை அகற்றுவதற்காக 160கோடி செலவு செய்ததாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளன.

இதுவரை சூப்பர்மேனகா நடித்த ஹென்றி கவில் சமீபத்தில் வெளியான ஜஸ்டிஸ் லீக் படத்திலும் சூப்பர் மேனகா நடித்துள்ளார். அவர் இதில் நடித்து கொண்டிருக்கும் பொழுது மற்றோரு ஹாலிவுட்படமான ‘மிஷன் இம்பாசிபிள் 6’ படத்திலும் நடித்துக்கொண்டிருந்தார்.

மிஷன் இம்பாசிபிள் 6 படத்தில் நடிக்க அவரது காதாபாத்திரத்திற்கு மீசையுடன் நடிக்க அவசியமிருந்ததால் அவர் மீசை வைத்திருந்தார். ஆனால் சூப்பர்மேன் கதாபாத்திரத்திற்க்கு மீசை அவசியமில்லை என்பதால் அவரது மீசையை எடுக்குமாறு படக்குழுவினர் கூறினர். மிஷன் இம்பாசிபிள் படத்தின் தயரிப்பு நிறுவனமோ அதை மறுத்து விட்டது. அதனால் அவர் ஜஸ்டிஸ் லீக் படம் முழுவது மீசையுடன் நடித்தார். அவரது மீசையை கிராபிக்ஸ் மூலம் அகற்றியுள்ளனர் படக்குழுவினர். அதற்க்கு சுமார் 25மில்லியன் டாலர் செலவு செய்துள்ளனர். இந்திய மதிப்பின் படி 160கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.