சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்பட போஸ்டர்ஸ் வெளியீடு

கபாலியை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் காலா. தனுஷின் Wunderbar Films நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் கபாலியை இயக்கிய பா.ரஞ்சித் காலா படத்தையும் இயக்குகிறார். ஒரு இளம் இயக்குனர் தொடர்ந்து ஒரு பெரிய நடிகரை வைத்து படம் இயக்குவது இதுவே முதல்முறை ஆகும்.

கபாலியை போன்றே இப்படமும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும் என்றால் அது மிகையாகாது. தற்போது காலா படத்தின் இரண்டு புதிய போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.