குற்றாலத்தில் போக்குவரத்து நெரிசல் – சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது

Kuttralam tourist vistors increased

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் குற்றாலத்திற்க்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா தலத்தில் ஒன்றானது குற்றாலம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் குற்றால சீசன் என்பர். மே மாத இறுதி முதல் ஆகஸ்ட் வரை குற்றாலத்தில் சாரல் மழை பெய்யும். இந்த வருடம் சீசன் நேரத்தில் அதிகம் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ள்ளதால் குளிப்பதற்கு பல முறை தடை விதிக்கப்பட்டது. இந்த வருடம் சுற்றுலா பயணிகளின் வருகை மிக குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையின் காரணமாய் குற்றாலத்திற்க்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அணைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tagged with:     , , ,