தலைமுடி உதிர்வுக்கு தீர்வாக ஸ்மார்ட் சீப்பு..!

தலைமுடி உதிர்வுக்கு மருந்தாக ஸ்மார்ட் சீப்பை பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லோரியல் அறிமுகப்படுத்த உள்ளது.

பெண்கள் , ஆண்கள், வயதானவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் கவலைப்படும் விஷயம் முடி உதிர்தல்.இதற்கு தீர்வு காண வர உள்ள ஸ்மார்ட்  சீப்பில் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி தலை வாரும்போது தலையில் உள்ள ஆரோக்கிய குறைபாடுகள், முடி உதிர்தல், தலைமுடி உடைதல் முதலிய குறைபாடுகள் அறியப்படும் எனவும் அதற்கு உரிய சிகிச்சைகளை அறிய உதவும் எனவும் தெரிகிறது.

இந்த சீப்பில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோபோன்களை நோக்கியா போன் கொண்டு இயக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்திய சந்தையில் இந்த  ஸ்மார்ட் சீப்புகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tagged with:     , , ,