மஹிந்திராவின் புதிய கண்டுபிடிப்பு

mahindra automatic tractor

 

மஹிந்திரா நிறுவனம் புதிதாக தானியங்கி ட்ராக்ட்டர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது விவசாயிகளுக்கு அதிகம் பயன்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். விவசாயிகள் அதிகம் ட்ராக்ட்டர் மட்டுமே பயன் படுத்துகின்றனர். உழுவது, நிலத்திற்கு மருந்து தெளிப்பது போன்ற பல விஷயங்களுக்கு ட்ராக்ட்டர் மட்டுமே அவர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தாங்களே ட்ராக்ட்டர் ஒட்டுகின்றனர் சிலர் வெளி ஆட்களைவைத்து ட்ராக்ட்டர் ஒட்டுகின்றனர். இனி இந்த கவலையில்லாத வகையில் மஹிந்திரா நிறுவனம் தானியங்கி ட்ராக்ட்டர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

இதனை ஒரு ரிமோட் மட்டுமே வைத்து கண்ட்ரோல் செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனர். வழிகளில் ஏதேனும் தடைகள் இருந்தால் அதனையும் கடந்து செல்லும் கருவி பொறுத்தப்பட்டுள்ள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது முக்கியாக விவசாயிகளுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம் எனவும் கூறியுள்ளனர்.

Tagged with:     ,