மெர்சலில் சிக்கிய ‘மேயாதமான்’ – வசூல் விவரங்கள்

meeyatha maan collection

ஜிகிர்தண்டா, இறைவி போன்ற வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த படமே மேயாதமான். இப்படம் தீபாவளி அன்று வெளிவந்துள்ளது. விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி அன்று வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை மறந்து விட்டனர். ஆனாலும் படம் வெளியாகி சில நாட்ட்களுக்கு பிறகு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இப்படம்.

‘மேயாதமான்’ சென்னையில் மட்டும் 35லட்சம் வசூல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.3கோடி வசூல் செய்துள்ளது. தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இச்செய்தியை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியிலுள்ளனர்.