இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் மெர்சல் தான் – விவரம் உள்ளே

mersal going to be the blockbuster of the year

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் ரசிகர்கள், பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவர்களிடமும் பாராட்டை பெற்றுள்ளது. படம் ரிலீஸ் முன்பும் மற்றும் படம் ரிலீஸ் ஆன பின்பும் நிறைய சிக்கல்களை சந்தித்துள்ளது.

பிரெச்சனைகளை பல இருந்தாலும் அதையெல்லாம் ஒருபக்கம் தள்ளிவிட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்களை குவித்து வருகிறது. மெர்சல் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது என திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கூறிவருகின்றனர். இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படம் மெர்சல் தான் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

படம் வெளியாகி 2வாரங்கள் ஆன பின்பும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி வருவதாகவும் 5,6 ஷோக்கள் அதிகம் செய்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்