பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி வியட்நாம் பிரதமர் நியான் ஸூவானைச் சந்தித்தார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31வது ஆசிய உச்சி மாநாடு மிக பிரமாண்டமாக நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடு தலைவர்கள் அனைவரும் கைகோர்த்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஆசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்த இந்திய வம்சாவளி மக்கள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதின் மூலம் இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பு வளரும் என்று கூறப்படுகின்றன. அந்த மாநாட்டில் வியட்நாம் பிரதமர் நியான் ஸூவான் புக்கை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி.