Nasaவின் பருவ நிலையை ஆராயும் ‘வாட்ர் கிளைடர்’

Whattr_Glider

அமெரிக்க விண்வெளி அமைப்பு நாசா ‘வாட்ர் கிளைடர்’ என்ற இலகுரக விமானங்களை உபயோகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தட்பவெப்ப ஆராய்ச்சிக்காக இந்த கிளைடர் பயன்படுத்தப்பட உள்ளது.

அமைப்பு 

இந்த கிளைடரின் இறக்கைகள் அசையாது. இதன் இறக்கைகளின் நீளம், மூன்று அடிகள். இறக்கைகள் கார்பன் இழையால் ஆனது. தொலைவிலிருந்து இதைக் கட்டுப்படுத்தத் தேவையான மென்பொருட்கள் மற்றும் சாதனங்களும் இதில் இருக்கும்.

பயன்பாடு

காற்றின் ஈரப்பதம், வேதியல் தன்மைகள், வெப்ப நிலை போன்ற, பல தட்ப வெப்பக் காரணிகளை அலசும் மின்னணு உணர்வான்கள், இந்த கிளைடரில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

திடீர் புயல், சூறாவளி போன்றவை உருவாகும்போது, உடனடியாக இதன் மூலம் பருவ நிலை வல்லுநர்கள் தகவல்களை பெற்று முன்னெச்சரிக்கை செய்ய முடியும்.

எதிர்காலத் திட்டம்

‘வாட்ர் கிளைடர்’ (whaatrr_glider) என்று அழைக்கப்படும் இந்த கிளைடரை, பூமியில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தின் பருவநிலை ஆராய்ச்சிக்கும் பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.