மீண்டும் நடிக்க வருகிறார் நஸ்ரியா

naziriya back to cinema

நஸ்ரியா மீண்டும் படங்களில் நடிக்கப்போவதாக அதிகாரபூர்வமான செய்தி வெளியாகிவுள்ளது.

நேரம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நஸ்ரியா தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதன் பின்னர் ராஜா ராணி படத்தில் ஆர்யாவுக்கு காதலியாக நடித்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார். திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அதன் பின்பு அவர் மலையாள நடிகர் ‘பஹத் பாசிலை’ 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.

தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மீண்டும் நடிக்க போவதாக ட்விட் செய்துள்ளார். அஞ்சலி மேனன், ப்ரிதிவிராஜ், பார்வதி படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பின்பு துல்கர் சல்மானுடன் மாலையாளம் மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியாவின் வருகையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tagged with:     , ,