தெலுங்கில் நேனே ராஜு நேனே மந்திரி படத்தின் டீஸர் வெளியானது.

ராணா டகுபதி தமிழில் வெளிவந்த பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இதனையடுத்து அவர் தெலுங்கில் நேனே ராஜு நேனே மந்திரி படத்தில் நடித்தார். இப்படத்தை  தேஜா இயக்கத்தில் ராணா டகுபதின் தந்தையான டகுபதி சுரேஷ் பாபு  அவரது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். மேலும் அனுப் ரூபன்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காஜல் அகர்வால், கேத்தரின் திரேசா, நவ்தீப் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டீஸர்-ஐ படக்குழுவினர் வெளியிட்டனர்.