விரைவில் வருகிறது புதிய 50ரூபாய் நோட்

புதுடெல்லி : புதிய ₹50 நோட்டை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. கடந்த வருடம் புதிய ₹500 மற்றும் ₹2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய 50 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. புதிய ரூபாய் நோட்டு புளோரசன்ட் நீல நிறத்தில் இருக்கும், நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஹம்பி கல் ரதத்தின் படம் பின்புறம் இடம்பெற்றிருக்கும். தூய்மை இந்தியா திட்ட லோகோவும் இருக்கும். நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி படமும், வலப்புறம் அசோக தூண் சின்னமும் இடம் பெற்றிருக்கும். தேவநாகரி மற்றும் ஆங்கிலத்தில் ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டிருக்கும். 66 மி.மீ x 135 மி.மீ அளவில் ரூபாய் நோட்டு இருக்கும். தற்போது புழக்கத்தில் உள்ள 50 ரூபாய் நோட்டும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.